இந்தியாவில் நடைபெற்ற போராட்டத்தில் 80 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயம் - விவசாயி ஒருவர் உயிரிழப்பு...!

Wednesday, 27 January 2021 - 8:43

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+80+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
இந்தியாவின் வேளாண் சட்டத்துக்கு எதிராக நேற்று டெல்லியில் முன்னெடுக்கப்பட்ட உழவு இயந்திர போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 80 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் உள்ள செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் நேற்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது காவற்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் இடம்பெற்றன.

உழவு இயந்திரங்களில் அணிவகுப்பாக சென்ற விவசாயிகள் செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எவ்வாறாயினும் இராணுவத்தினரின் உதவியுடன் செங்கோட்டையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியின் சில பகுதிகளில் நேற்றிரவு தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து வன்முறை குறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் தற்போது டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.