வி.கே.சசிகலா இன்று விடுதலை...!

Wednesday, 27 January 2021 - 9:00

%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88...%21
ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த அனைத்திந்திய அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் வி.கே.சசிகலா இன்று விடுதலையானார்.

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சுகயீனமுற்ற நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் தினம் தொடர்பான தகவல்கள் வெளியிடவில்லை.

கொவிட்-19 தொற்றுறுதியான அவர் கடந்த 20 ஆம் திகதி பெங்களூரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தொற்றுறுதியானதன் பின்னர் அவருக்கு கடுமையான சுவாச பிரச்சினைகள் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் அவரின் உடல்நிலை தொடர்பான மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.