நடிகையும், பிக்பொஸ் பிரபலமுமான ஷிவானி வீட்டில் நடந்த விசேட நிகழ்வொன்றுக்காக பிக்பொஸ் பிரபலங்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு சின்னத்திரை தொடர் மூலம் நடிகையான ஷிவானி நாராயணன் அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய தொடர்களிலும் நடித்தார்.
சமூக வலைத்தளத்தில் எக்டிவாக இருக்கும் ஷிவானி தனது படங்களை பகிர்வதுடன் நடன வீடியோக்களையும் பகிர்ந்துக் கொள்கிறார்.
இதற்கிடையே பிக்பொஸ் வீட்டுக்குள் சென்ற ஷிவானிக்கு முதலில் எதிர்ப்பு அதிகரித்jதால் வெளியே வரும்போது அதிக ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில், தான் வளர்த்து வரும் நாய் குட்டியின் முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார் ஷிவானி.
வித விதமான 5 கேக்குகளுடன் தனது செல்லப்பிராணியின் பிறந்தநாளை சிறப்பித்திருக்கிறார். இதில் பிக்பொஸ் பிரபலங்கள் சம்யுக்தா, பாலா, ஆஜித் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.