மைத்திரிக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

Tuesday, 23 February 2021 - 8:23

%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, ஜனாதிபதியால் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் காவல்துறைமா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் குறித்து, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கான தகைமை தொடர்பில் ஆராய்வதற்காக, குறித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்புமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அறிக்கை 600 இற்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின், சிங்கள மொழிப்பெயர்ப்பு, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதா என்பதை ஆராய சட்டமா அதிபருக்கு அறிக்கையை அனுப்புமாறு, அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதுடன், அந்த அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கான தகைமை சட்டமா அதிபருக்கு உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2019 ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு அமைச்சு பதவிக்காக, எந்தவொரு பதில் நியமனமும் மேற்கொள்ளாமை மற்றும் தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தும், வேண்டுமென்றே சஹ்ரானின் ஐ.எஸ் அச்சுறுத்தலுக்கு வழியமைத்ததாக ஆணைக்குழு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக அலட்சியமாக பொறுப்பிலிருந்து விலகியமை தொடர்பில் தண்டனை சட்டக்கோவை விதிகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் வழக்கை தொடர, சட்டமா அதிபரினால் பரீசீலிக்கப்பட வேண்டும் என விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைத் தகவல்களின் அடிப்படையில், அந்த அறிக்கை இந்த வார நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆணைக்குழு அறிக்கையின் பிரதி தமக்கு கிடைக்கும் வரையில், எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திக்காதிருக்க, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தீர்மானித்துள்ளார்.