மசகு எண்ணெயின் விலை அதிகரித்தாலும் அதன் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை - உதய கம்மன்பில

Tuesday, 23 February 2021 - 8:32

%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2
உலக வர்த்தக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், அதன் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினைகள் தொடர்பில் பெற்ரோலிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்தச் சுமை கடுமையானதாக இருந்தாலும், அதனைத் தாங்கள் தொடர்ந்தும் தாங்கிக்கொள்வதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், உலக வர்த்தக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிக்கின்றமையானது, இலங்கையின் வெளிவாரி வர்த்தகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என வர்த்தகத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.