இலங்கையுடனான போட்டியில் கிறிஸ் கெய்ல்?

Tuesday, 23 February 2021 - 11:28

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%3F+

இருபது20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்று மேற்கிந்திய தீவுகள் நோக்கிப பயணமான போதிலும் இலங்கையை எதிர்த்தாடவுள்ள மேற்கிந்த தீவுகள் குழாம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

எனினும், மேற்கிந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில், தற்போது விளையாடிவரும் இருபது20 போட்டிகளை நிறைவு செய்து இன்று பிற்பகல் மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக அறியமுடிகிறது.

அவர் தற்போது பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளில் க்கேவட்டா க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் கிறிஸ் கெயில், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதி கட்டப் போட்டிகளில் இணைந்து கொள்வார் என பாகிஸ்தானின் விளையாட்டு செய்தியாளரான சாஜ் சாதிக் தனது டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.