சி.வி.விக்னேஸ்வரன் - இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Tuesday, 23 February 2021 - 16:04

%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தமிழ் மக்கள் தேசியகூட்டணியின் தலைவரும் வடமாகாண சபை முன்னாள் முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரன் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்துள்ளார்.

இதன்போது வடமாகாணம் உட்பட இலங்கையின் முன்னேற்றம், அபிவிருத்தி மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தினார் என இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழர் சுயாட்சி கழகத்தில் பொதுச் செயலாளர் அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறுபான்மை கட்சிகளையும் அதன் பிரதிநிதிகளையும் இந்திய உயர்ஸ்தானிகரகம் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது.

அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்று அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரையும் இந்திய உயர்ஸ்தானிகரும் பிரதி உயர்ஸ்தானிகரும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.