இலங்கையை வந்தடைந்தார் இம்ரான் கான் (படங்கள்)

Tuesday, 23 February 2021 - 16:14

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திலுள்ள எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

அவரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

இதன்போது அவருக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ள இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கிறார்.

இதன்படி தற்போது பிரதமர் மகிந்தராஜபக்ஷவிற்கும் அவருக்கும் இடையலான சந்திப்பு தற்போது இடம்பெறுகிறது.

நாளை காலை 9.30 வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும், 10.30க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் இம்ரான் கான் சந்திக்கவுள்ளார்.

அவருடன் இலங்கைக்கு உயர்மட்டத்தூதுக்குழு ஒன்றும் வருகை தந்துள்ளது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகளும் இந்த விஜய காலகட்டத்தில் கைச்சாத்தாகவுள்ளன.

இன்றைய தினம் அவர் இலங்கைக்கு பயணிப்பதற்காக, தமது நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா அனுமதியளித்திருந்தது.

கடந்த 2019ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு விஜயம் ஒன்றின் போது, பாகிஸ்தான் தமது வான்வெளியைப் பயன்படுத்த அவருக்கு தடைவிதித்திருந்தது.
 No description available.
No description available.No description available.