மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து இயற்கைக்கு மாறாக பாலியல் உறவுகொண்ட வைத்தியர்! கொடுமையால் மனைவி தற்கொலை

Tuesday, 23 February 2021 - 18:06

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%21+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88

குஜராத்தில் எலும்பியல் அறுவை நிபுணர் ஒருவர் தன் மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்டதால், அவரது கொடுமை தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் காட்லோடியா பகுதியை சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 2020 ஆகஸ்டில் திருமண தகவல் மையம் மூலம் இவ்விருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த 9ஆம் திகதி வீட்டுக்கு வெளியே வைத்தியரின் மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த காவல் துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். திருமணமான ஓராண்டுக்குள் இப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், வைத்தியரின் வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர்,   உயிரிழந்த பெண் அவரின் கைப்பட எழுதியிருந்த 18 பக்க கடிதத்தை அறையிலிருந்து கைப்பற்றினர். அந்த கடிதத்தை காவல்துறையினர்  தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில், “எனது கணவருக்கும் எனக்கும் இடையிலான பாலியல் உறவு மிகவும் கொடூரமானது.

அவர் ஒரு வைத்தியர் என்பதால், அவ்வப்போது எனக்கு  போதைப் பொருட்களைக் கொடுப்பார். நான் மயக்கமடைந்தவுடன், என்னை கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொள்வார்.

அதற்காக பலமுறை என்னை மயக்கமடைய செய்துள்ளார். எனது மாமியாரும், எனது கணவரும் திருமணமான சில நாட்களிலேயே என்னை துன்புறுத்தத் தொடங்கினர்.

எனது குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்தினர். அவர்களது விருப்பங்களை நிறைவேற்றாததால் என்னை அவமதித்தனர். என் கணவரின் பெற்றோர் என்னை தவறாக நடத்தியது மட்டுமின்றி, அடித்து துன்புறுத்தினர்” என அக்கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

அதையடுத்து அகமதாபாத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக 47 வயதான வைத்தியரையும் அவரது தந்தை மற்றும் தாய்  ஆகியோரையும், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம்

Sri Lanka Sumithrayo - Colombo

0112 692 909, 0112 683 555 or 1333