திட்டமிட்டு நிதி மோசடிகளில் ஈடுபட்டுவந்த 6 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட எண்மர் கைது

Tuesday, 23 February 2021 - 19:47

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+6+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
திட்டமிட்டு நிதி மோசடிகளில் ஈடுபட்டுவந்த 6 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட எண்மரை, களனி குற்றத்தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொதி ஒன்றை சுங்கத்தில் இருந்து விடுவித்துத் தருவதாக கூறி, ஒருவரிடம் இருந்து 1,750,000 ரூபாய்களை மோசடி செய்தமை தொடர்பான விசாரணையின் அடிப்படையில் அவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

பத்தரமுல்லையில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனையோர் கைதாகினர்.

அவர்களில் 6 வெளிநாட்டவர்கள் கல்கிஸ்ஸை பகுதியில் தங்கி இருந்துள்ளனர்.

கைதான வெளிநாட்டவர்களில் 4 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், 2 ரஷ்யப் பெண்கள் அடங்குவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் தொகையும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.