கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு - ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம்

Tuesday, 23 February 2021 - 19:59

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடத்து எதிர்வரும் 14 நாட்களுக்கு பின்னர் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொடுப்பனவுகள் மற்றும் சேவையில் நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் இன்று முற்பகல் தேசிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து சுகாதார அமைச்சு வரையில் பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தது.

இதன் காரணமாக கொழும்பு நகரமண்டப பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்தில் உள்நுழைய முயற்சித்தமையை அடுத்து பதட்டம் ஏற்பட்டதாக அங்கிருந்த எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சுகாதார அமைச்சின் தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு மற்றும் எழுத்துமூல ஆவணங்கள் எவையும் வழங்கப்படாமை காரணமாக கலந்துரையாடல் தோல்வியானதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடத்து தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமென அந்த சங்கத்தின் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்தார்.