பாதுகாப்பானதும், செயல்திறன் மிக்கதுமான ஜொன்சன் என்ட் ஜொன்சன் தடுப்பூசி

Thursday, 25 February 2021 - 8:59

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+
ஜொன்சன் என்ட் ஜொன்சன் (Johnson & Johnson ) கொவிட் -19 தடுப்பூசி, ஒரு முறை செலுத்தப்படுவதிலேயே, பாதுகாப்பானதும், செயல்திறன் மிக்கதுமாக உள்ளதென அமெரிக்க உணவு மற்றும் ஒளடத கட்டுப்பாட்டாளர்களின் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 44,000 பேர் தொடர்புடைய உலகளாவிய பரிசோதனையில் பல வகையான கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில், ஜொன்சன் என் ஜொன்சன் கொவிட் -19 தடுப்பூசி, 66 சதவீத பயனுள்ளதாக இருந்ததென அந்த நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இந்த தடுப்பூசியின் செயல்திறன், அமெரிக்காவில் 72 சதவீதமும், லத்தீன் அமெரிக்காவில் 66 சதவீதமும், தென்னாபிரிக்காவில் 57 சதவீதமும் என்ற அளவில் காணப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.