உலகில் முதன் முறையாக பெண்களாக மாறிய இரட்டையர்கள்!

Thursday, 25 February 2021 - 10:39

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
உலகிலேயே முதன் முறையாக, ஒரே நேரத்தில் பெண்களாக மாறிய இரட்டையர்கள் என்ற பெருமையை  பிரேஸில் நாட்டைச் சேர்ந்த  இருவர் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிறந்த சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இந்த இரட்டையர்களே அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர்.

பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள் பெண்களைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருந்தனர். இதனால் தமது பாடசாலை காலங்களில் பலவித துன்பங்களுக்கு ஆளாகி வந்துள்ளனர்.

எனினும், குடும்பத்தார் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனபோதிலும் தாம் முழுவதுமாக பெண்களாக மாறி, சமூகத்தில் மதிப்புடன் வாழ வேண்டும் என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் அதை குடும்பத்தார் விரும்பவில்லை.

பெண்ணாக மாறினால், மேலும் பல தொல்லைகள் வரும் என, அஞ்சியதே அதற்கு காரணம். எனினும், பாட்டனாரின் ஆதரவு இரட்டையர்களுக்கு ஆறுதல் தந்தது.

அவர், தன் சொத்தை விற்பனை செய்து, சுமார் 45 இலட்சம் ரூபாவை வழங்கினார்.

அதன் மூலமாக இரட்டையர்கள், 5 மணி நேர அறுவை சிகிச்சையின் பின்னர், கடந்த 14 ஆம் திகதி முழுமையான பெண்ணாக மாறி விட்டனர்.

இதையடுத்து, அவர்கள் ஒரு காணொளியை வெளியிட்டு, அதில் மருத்துவ மாணவியான மைலா ரெசன்டே, ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி,'என் உடலை நான் எப்போதும் நேசிப்பேன்.

எனக்கு பிடிக்காத பாகம் நீக்கப்பட்டது, எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார். உலகில் முதன் முறையாக ஒரே சமயத்தில், பெண்களாக மாறிய இரட்டையர் என்ற சிறப்பை, 19 வயதான மைலா ரெசன்டே, சோபியா அல்புர்க் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.