14 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து 7 பேர் பாலியல் தொல்லை: இருவர் கைது!

Thursday, 25 February 2021 - 15:10

14+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%3A+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியொருவருக்கு போதைப்பொருளை கொடுத்து, அவரை தமது பாலியல் தேவைகளுக்கு உபயோகித்துவந்த 7 பேரில் இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணியாற்றிவருவதால் சிறுமி தனது தாய். சகோதரனுடன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கொரோனா பிரச்சினையால் பாடசாலைகள் திறக்கப்படாத நேரத்தில் சிறுமி தாயாரின் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக்கிவந்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி வந்தார்.

சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்த சிறுமியின் உறவினர் மூலம் சிறுமிக்கு மேலும் சில இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவர்கள் சிறுமியை வெளியே வருமாறு அழைத்துச்சென்று, போதை பழக்கத்தை ஏற்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களாக அவர் இளைஞர்களின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்துள்ளதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை சென்றபோதே தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தாயாரிடம் கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அவர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் மலப்புரம் மாவட்ட காவல்துறை உயரதிகாரிக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

அவரின் உத்தரவுக்கமைய, சிறுமி பயன்படுத்திய கைப்பேசி மூலம், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டுபிடித்தனர். இதில் சிறுமியின் உறவினர் உட்பட 7 பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.