பேலியகொடை காவல்நிலையத்தில் இளைஞர் தாக்கப்பட்டமை ; காவல்துறையினர் நால்வர் பணிநிறுத்தம்

Friday, 26 February 2021 - 16:43

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%3B+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
பேலியகொடை காவல்துறை நிலையத்தில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பரிசோதகர் ஒருவரும், கான்ஸ்டபிள்கள் மூவரும் இவ்வாறு பணித்தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டத்தரணி மைத்ரி குணரத்னவின் மகன் மிகார் குணரத்ன மீது, பேலியகொடை காவல்துறை நிலையத்தில், அதிகாரிகள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.