சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய சவூதி முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல்

Saturday, 27 February 2021 - 7:44

%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகியை (Jamal Khashoggi) கொலை செய்வதற்கு சவூதி முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் (Mohammed bin Salman) அனுமதி வழங்கியிருந்தாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2018 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான அமெரிக்க புலனாய்வு அறிக்கையை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமால் கஷோகியை பிடிப்பதற்கு அல்லது கொலை செய்வதற்கு சவூதி இளவரசர் அனுமதியளித்துள்ளதாக புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவினால் சவுதி அரேபியாவுக்கு பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், சவூதி இளவரசருக்கு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, எதிர்மறை, உண்மைக்கு புறம்பான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்து சவூதி அரேபியா அதனை நிராகரித்துள்ளது.