வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி

Saturday, 27 February 2021 - 10:49

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்காக வழங்கப்படும் நிதி வசதிகளை, வாகனங்களின் பெறுமதியில் 80 சதவீதம் வரையில் உயர்த்த மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதற்கமைவான உத்தரவு, மத்திய வங்கியின் நாணய சபையினால், வங்கியல்லா நிறுவனங்களுக்கு கடந்த 17 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நிதி வணிகச் சட்டத்தின் 12ஆவது சரத்தின்கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவின் படி, முதற்தடவை பதிவுசெய்யப்பட்டதன் பின்னர், இந்த நாட்டில் ஒரு வருடத்திற்கும் அதிக காலம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு, அதன் பெறுமதியில் 80 சதவீத நிதி வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தலின் பிரகாரம், ஒரு வருடத்திற்கும் பழமையான வாகனங்களுக்காக 70 சதவீதம் வரையில் நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிலையில், அதனை 80 சதவீதம் வரையில் உயர்த்த மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும், தற்போது வரையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.