20 வருடங்களின் பின்னர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ள பிரபல நடிகர்

Saturday, 27 February 2021 - 15:28

20+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
தமிழ் சினிமாவில் தனக்கென தனியான ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா.

25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தில் சூர்யா 05 வேடங்களில் நடிக்க உள்ளார் என எல்லாம் தகவல்கள் கசிந்திருந்தன.ஆனால் இயக்குனர் தரப்பினர் இந்த தகவலை நிராகரித்திருந்தனர்.

தற்சமயம் இந்த படம் குறித்த ஒரு தகவல் கசிந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் ராஜ்கிரன் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து “நந்தா“ திரைப்படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் சூர்யாவுடன் இணைய உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.