கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியின் தலைநகர் பகுதியிலுள்ள சிறைச்சாலையில் இருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்றுள்ளனர்.
அவர்கள் தப்பி சென்ற போது குறித்த சிறைச்சாலையின் பணிப்பாளர் உட்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பலியானவர்களில் கைதிகளை பார்வையிட வந்தவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறையிலிருந்து தப்பியவர்களில் பிரபல பாதாளகுழு உறுப்பினரான ஆர்னால் ஜோசப் என்ற நபர் தப்பி சென்ற சில மணித்தியாலங்களில் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
உந்துருளி ஒன்றில் தப்பி சென்ற அவர் காவல்துறையினரின் சோதனைசாவடி ஒன்றில் வைத்து சுட்டக்கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் 400 கைதிகள் வரை தப்பி சென்றதாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும் தப்பியவர்கள் தொடர்பான முழுமையான தகவல் இதுவரையில் வெளிப்படுப்படவில்லை.