ஆர்யா என்னை ஏமாற்றிவிட்டார்-இலங்கை பெண் முறைப்பாடு

Saturday, 27 February 2021 - 16:33

%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்யா.

இவரது கஜினிகாந்த திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை ஆர்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 இலட்சம் பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக இலங்கை பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த பெண் தற்போது ஜெர்மன் நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்போது அவர் இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஒன்லைன் மூலமாக முறைப்பாடு செய்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்யா சினிமாவில் நுழைந்த காலப்பகுதியில் பணத்துக்கு கஷ்டப்படுவதாக கூறி தன்னிடத்தில் பணம் பெற்றுக்கொண்டார் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆர்யா தன்னை காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பவதாகவும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.