நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவிகள் விடுவிப்பு

Tuesday, 02 March 2021 - 15:31

%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+279+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நைஜீரியாவின் சம்ஃபாரா மாவட்டத்தில் ஓர் உறைவிடப் பாடசாலையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வடமேற்கு நைஜீரிய மாநிலமான சம்பாராவில் உள்ள ஒரு உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட சிறுமிகளை கடத்தல்காரர்கள் பாதுகாப்பாக விடுவித்துள்ளதாக மாநில ஆளுநர் உறுதிபடுத்தியுள்ளார்.

மாணவிகள் அதிகாரிகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எவ்வித பணமும் செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மீட்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

கடத்தப்பட்ட 279 மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நைஜீரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 317 அல்லவென அவர் மேலும் தெரிவித்தார்.