ஆபாச காணொளி-பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் இராஜினாமா

Wednesday, 03 March 2021 - 16:48

%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE
ஆபாச காணொளி மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி தனது அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

பெண் ஒருவருக்கு தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அமைச்சர் ஜர்ஹிகோலி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

மேலும் அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி, ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளமை கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இவர் இராஜினாமா செய்துள்ளார்.