தற்கொலை செய்த காவல் அதிகாரியின் உருக்கமான இறுதி கடிதம் (படங்கள்)

Wednesday, 03 March 2021 - 19:34

%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
தற்சமயம் நாடு முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ள பெண்ணின் கொலை சம்பவம் தொடர்பில் மற்றொரு விசேட தகவல்  கிடைக்கப்பெற்றுள்ளது.

கொழும்பு-டேம் வீதியில் கடந்த திங்கட்கிழமை பயணப்பொதியில் சுற்றிவைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

காவல்துறையினரின் சோதனை நடவடிக்கைகளை அடுத்து சடலமாக மீட்கப்பட்ட பெண் குருவிட்ட பகுதியை சேர்ந்த 30 வயதானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த பெண்ணின் சடலத்தை பயணப்பொதியில் கொண்டு வந்த நபரை சீ.சீ.டீ.வி மூலம் அடையாளம் கண்டது காவல்துறை.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் புத்தல காவல்துறை பிரிவில் காவல்துறை பரிசோதகராக சேவையாற்றி வரும் நபர் என்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து இவரை கைது செய்ய காவல்துறை  நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் சந்தேக நபர் இன்று காலை தனது வீட்டுக்கருகில் உள்ள வனப்பகுதி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலத்துக்கருகில் தனது மனைவிக்காக எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த கடிதத்தில் தனக்கு திருமணத்திற்கு அப்பால் ஒரு உறவு காணப்பட்டதாகவும் அந்த உறவு காரணமாக பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் காவல்துறை பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மனைவிக்கு தெரியாமல் தான் இழைத்த தவறுகளுக்காக மன்னிப்புக்கோருவதாகவும் அந்த கடிதத்தில் காவல்துறை பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதம் கீழே..