மியன்மாரில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்: 04 பேர் பலி

Wednesday, 03 March 2021 - 21:45

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A+04+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
மியன்மாரில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இன்று 4 பேர் உயிரிழந்தனர்.

மியன்மாரில் நிலவும் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்;ட தலைவர்களை கைது செய்த மியன்மார் இராணுவத்தினர் அந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

ஜனநாயக ரீதியிலான ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் பொது மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக மியன்மார் பாதுகாப்பு தரப்பினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இன்று 4 பேர் உயிரிழந்தனர்.

அத்தடன் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கான சிகிச்சைகளை வழங்கவும் சிக்கல்கள் நிலவுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.