அரசியலில் இருந்து விலகுகிறார் வி.கே. சசிகலா

Thursday, 04 March 2021 - 12:15

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.+%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE
அனைத்திந்திய அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுமையுடன் எதிர்வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.

பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ தாம் என்றும் ஆசைப்பட்டதில்லை எனவும், ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் தாம் என்றென்றும் நன்றியுடன் இருப்பதாகவும் வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 4 வருடங்களாக சிறைதண்டனை அனுபவித்து வந்த வி.கே.சசிகலா அண்மையில் விடுதலையானார்.

இந்தநிலையில் அவர் அரசியலில் மீண்டும் ஈடுபடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அரசியலில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.