மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அதனை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் நேற்று மாத்திரம் 38 பேர் பலியாகினர்.
மியன்மாருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் (Christine Schraner Burgener) இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் மியன்மாரில் இருந்து அதிர்ச்சியூட்டும் காணொளிகள் வெளிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் மியன்மாரின் இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைளை அமெரிக்க பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரச தலைவர்களை தடுத்து வைத்து அந்த நாட்டின் ஆட்சியை கடந்த மாதம் முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியது.
இதற்கு உலக நாடுகள் கண்டணம் வெளியிட்டதுடன் ஜனநாயக்க ஆட்சிக்கு வழிவிட வேண்டும் என வலியுறுத்தி மியன்மார் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினை ஒடுக்குவதற்காக மியன்மார் பாதுகாப்பு படையினர் கொடூர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.