சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் காவல்துறை

Thursday, 04 March 2021 - 20:08

%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
கொழும்பு-டேம் வீதியில் பயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முகத்துவாரம் முதல் ஹங்வெல்லை வரையான பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த பெண்ணை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் கொழும்பில் இருந்து புத்தல நோக்கி பயணித்த பேருந்தினை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த பேருந்தின் சாரதி, நடத்துனரிடமும் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேபோல் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலைப்பகுதி கிடைக்கும் வரையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படாது எனவும் காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.