ஐரோப்பாவில் ஆறு வாரங்களின் பின் கொவிட் தொற்றாளர் தொகையில் அதிகரிப்பு

Thursday, 04 March 2021 - 22:27

%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஐரோப்பாவில் ஆறு வாரங்களுக்கு பின்னர், கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் ஹேன்ஸ் க்ளுஜ்  நேற்றைய தினம் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஐரோப்பாவில், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 9 சதவீதமளவில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில், தொற்று அதிகரிப்பை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அதேநேரம், மேற்கு ஐரோப்பாவில் ஏற்கனவே பரவல் அதிகரித்து காணப்படும் பகுதிகளில், புதிய தொற்றுகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த நிலைமை வழமைக்கு திரும்ப வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் ஹேன்ஸ் க்ளுஜ் தெரிவித்துள்ளார்.