தொண்டையில் ரிமோட் பற்றரி சிக்கி 17 மாத சிறுமி உயிரிழப்பு (படங்கள்)

Friday, 05 March 2021 - 20:06

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+17+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
தொண்டையில் தொலைக்காட்சி ரிமோட்டின் பற்றரி சிக்கி காயம் ஏற்பட்டதால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் டெக்ஸஸ் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

17 மாதமான ரிஸ் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

முதலில் குறித்த சிறுமிக்கு தடிமன் ஏற்பட்டுள்ளது என நினைத்த பெற்றோர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சென்ற போது எடுக்கப்பட்ட கதிரியக்க பரிசோதனையின் போதே அவர் ரிமோட்டின் பற்றரியை விழுங்கி உள்ளார் என தெரிய வந்துள்ளது.

அதன் பின் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.