ஜொன்சன் எண்ட் ஜொன்சன் தடுப்பூசிக்கு கனடா அனுமதி!

Saturday, 06 March 2021 - 9:21

%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%21
ஜொன்சன் எண்ட் ஜொன்சன் (Johnson & Johnson ) கொவிட்-19 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு கனடா நேற்று அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ட்ராசெனகா (AstraZeneca), பைஸர் மற்றும் பயோன்டெக் (Pfizer-BioNTech) மொடேனா (Moderna) முதலான தடுப்பூசிகள் கனடா அனுமதியளித்துள்ள நிலையில், நான்காவது தடுப்பூசியாக ஜொன்சன் எண்ட் ஜொன்சன் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் 8 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

22,000 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.