ரஷ்யாவில் கொவிட்-19 நோயினால் 2 இலட்சம் பேர் மரணம்: ரொஸ்டெட் நிறுவனம் தகவல்

Saturday, 06 March 2021 - 11:08

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+2+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
ரஷ்யாவில் கொவிட்-19 நோயினால் 2 இலட்சம் பேர் மரணித்ததாக அந்த நாட்டு புள்ளிவிபரவியல் நிறுவகமான ரொஸ்டெட் (Rosstat) தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரையில் 88 ஆயிரத்து 285 மரணங்களே பதிவானதாக, ரஷ்ய அரசாங்கத்தின் கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ரொஸ்டெட் நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, 2 இலட்சத்து 432 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 16 ஆயிரத்து 64 மரணங்கள் பதிவானதாக ரஷ்ய கொரோனா கட்டுப்பாட்டு செயலணி தெரிவித்துள்ளது.

எனினும், ரொஸ்டெட் நிறுவகனத்தின் தரவுகளின்படி, ஜனவரி மாதம் 37 ஆயிரத்து 107 மரணங்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.