12 வயது சிறுமியை வன்புணர்ந்த நபர் தப்பியோட்டம்

Saturday, 06 March 2021 - 11:58

12+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
73 வயதான வயோதிப் பெண்ணின் கைகால்களைக் கட்டி வைத்து அவரது பொறுப்பிலிருந்த 12 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய சம்பவமொன்று விலச்சிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர் 40 வயதுடைய திருமணமானவர் என காவல் துறை தெரிவித்துள்ளது.

சம்பவ தினமன்று மேற்படி வயோதிபப் பெண்மணியுடன் பாதிக்கப்பட்ட சிறுமியும் காவல் துறையில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.

சந்தேக நபர் அவ்வயொதிபப் பெண்ணின் மருமகன் என காவல் துறையினர் தெரிவித்துள்ளர்.

குறித்த சம்பவத்தின் பின் சந்தேக நபர் தப்பியோடி உள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு இது குறித்து விலச்சிய காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.