மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை கல்லால் அடித்த பொது மக்கள்

Saturday, 06 March 2021 - 15:33

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தனது மனைவியை கொலை செய்த கணவனை பொது மக்கள் கல்லால் அடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின் தெலங்கானா-கம்மம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

திருமணமாகி சில நாட்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் சில நாட்களின் பின்னர் கருத்து முரண்பாடு ஏற்படத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து வாழவே முடியாது என்ற நிலையில் மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார்.

பிரிந்து சென்ற மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது மனைவி மீது கோபம் கொண்ட கணவர் மனைவியுடன் தனியாக பேச வேண்டும் என அழைத்து சென்றுள்ளார்.

வீட்டுப்புகதிக்கு அருகில் உள்ள முற்புதர் ஒன்றிற்குள் அழைத்துச் சென்று மனைவியின் கழுத்தை நெறித்துள்ளார்.

இதன்போது அவரது மனைவியின் சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் மனைவியை காப்பாற்ற முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மனைவியின் கழுத்தை விடாமல் பிடித்திருந்த அவர் விடாமல் கழுத்தை நெறித்துள்ளார்.

இதனையடுத்து பொது மக்கள் அவரை கல்லால் அடித்து தாக்கியுள்ளதுடன் மனைவியையும் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.