இந்தியாவில் இதுவரையில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

Saturday, 06 March 2021 - 22:29

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9
இந்தியாவில் இதுவரையில் ஒரு கோடியே 94 லட்சத்து 97 ஆயிரத்து 704 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நாளாந்தம் தொற்றுறுதியாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நேற்று தொற்றுறுதியானவர்களில் 82 சதவீதமானோர் குறித்த ஐந்து மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.

இந்தநிலையில் இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்று காலை வரை, இந்தியா முழுவதும் 3 லட்சத்து 57 ஆயிரத்து 478 முகாம்களில்‌ 1 கோடியே 94 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 69 லட்சத்து 15 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.