உந்துருளி விபத்தில் ஒருவர் பலி

Sunday, 07 March 2021 - 12:14

%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
வெல்லவாய-உல்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 31 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்த நபர் தனது உந்துருளியில் மிக வேகமாக பயணித்ததாகவும், இதனால் உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் காவல்துறை தெரிவிக்கின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.