12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய பொதிகளை விநியோகிக்கும் நபர்!

Sunday, 07 March 2021 - 17:33

12+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%21
வியட்நாமில் 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமியை பொதிகளை விநியோகிக்கும் நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

இவ்வாறு சிறுமியை காப்பாற்றிய நபரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சிறுமியை காப்பாற்றிய 31 வயதான குறித்த இளைஞர் அந்த தொடர்மாடியில் பொதியொன்றை விநியோகம் செய்வதற்காக வேனில் காத்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது சிறுமி ஒருவர் தொடர்மாடியின் 12 ஆவது மாடியில் ஒரு கையால் பால்கனியின் விழிம்பை பிடித்து தொங்கி கொண்டிருப்பதை கவனித்துள்ளார்.

சிறுமியை காப்பாற்றுவதற்கு ஆயத்தமாக இருந்த அவர், சிறுமி கீழே விழும் சமயத்தில் அந்த சிறுமியை பிடித்து காப்பாற்றியுள்ளார்.

மீட்கப்பட்ட சிறுமி தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.