மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

Monday, 08 March 2021 - 11:48

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
முதலாம் தவணைக்காக திட்டமிட்டப்படி மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து மாகாணங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள சகல பாடசாலைகளையும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.

மேல் மாகாணத்திலும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தயாராவுள்ளதாக கல்வி அமைச்சு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

எவ்வாறாயினும் இதன் இறுதி தீர்மானங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினரே மேற்கொள்வார்கள் எனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அவரது அனுமதியை எதிர்பார்த்துள்ளோம்.

இதற்கமைய அவரது அனுமதி கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் ஏனைய பகுதியை போன்று எதிர்வரும் 15 ஆம் திகதி மேல் மாகாணத்திலும் கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க முடியுமென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.