கர்ணன் டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு!

Monday, 22 March 2021 - 13:31

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 7.01 மணிக்கும் வெளியிடப்படவுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

திரைப்படத்தை எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம்திகதி திரையிடத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

இதேவேளை, கர்ணன் படத்த வெளியிடுவதற்கு எதிராக தடை விதிக்கக் கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.