சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஷிவானியின் புதிய புகைப்படம்

Friday, 26 March 2021 - 9:08

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற நாடகமொன்றின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய நாடகங்களிலும் கதாநாயகியாக நடித்தார் ஷிவானி.

இவர் கடந்த வருடம் இடம்பெற்ற பிக்பொஸ் சீசன் 04 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தினமும் விதவிதமான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் அவ்வப்போது நடன காணொளிகளையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது மாலைத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள, நடிகை ஷிவானி, தனது புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்சமயம் வைரலாகி வருகின்றது.