ராமரின் தோற்றத்தில் ராம்சரண்!

Friday, 26 March 2021 - 17:29

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%21
ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ராம் சரணின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ராம் சரண் இன்று (26) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராம் சரண் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் சுதந்திரப் போராட்ட வீரர்களான ராமராஜு மற்றும் கொமாரம் பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. ராம் சரண் அல்லூரி ராம்ராஜு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இன்று ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ராம் சரணின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் போஸ்டரில் கையில் வில் அம்புடன் ராம அவதாரமாக மிரட்டுகிறார்.

பாலிவுட் நடிகை ஆலியா பாட் ராம் சரணுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கிறார். அக்டோபர் 15 ஆம் திகதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.