30 கோடி ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்த சாக்ஷி மாலிக்

Tuesday, 30 March 2021 - 16:45

30+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D
பிரபல இந்தி நடிகை சாக்‌ஷி மாலிக் சில வருடங்களுக்கு முன்பு போட்டோ ஷூட் நடத்தி அதில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்த புகைப்படங்களை சாக்‌ஷியிடம் அனுமதி பெறாமல் நானி, அதிதிராவ், நிவேதா தோமஸ் ஆகியோர் நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான ‘வி' படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த புகைப்படத்தை திரையில் காட்டும்போது பாலியல் தொழிலாளி சம்பந்தமான வசனமும் பேசப்பட்டு இருந்தது. இதையடுத்து நடிகை சாக்‌ஷி மாலிக் 30 கோடி ரூபாவை கோரி  மும்பை நீதிமன்றில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில்,, சாக்‌ஷி மாலிக் புகைப்படத்தை திரைப்படத்தில் இருந்து நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதற்கமைய, குறித்த புகைப்படம் அடங்கிய காட்சி நீக்கப்பட்டதுடன் படக்குழுவினர் மன்னிப்பும் கேட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷாக்ஷிக்கு நட்டஈடு தொகையை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்க எதிர்வரும் முதலாம் திகதிவரை காலஅவகாசத்தை நீதிபதி வழங்கினார்.