கர்ணனின் நான்காவது பாடல் தொடர்பான அறிவிப்பு!

Tuesday, 30 March 2021 - 18:27

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது பாடல் தொடர்பில் இயக்குநர் மாரி செல்வராஜா ட்விட் செய்துள்ளார்.

அதில், கர்ணன் இடம்பெற்றுள்ள “கர்ணன் யுத்தம்” என்ற பாடலை நாளை வெளியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே, கர்ணன் அழைப்பு, பண்டாரத்தி புராணம் மற்றும் திரௌபதையின் முத்தம் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதனிடையே பண்டாரத்தி புராணம் பாடல் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக அப்பாடலில் இடம்பெறும் பண்டாரத்தி என்று சொல்லை மஞ்சனத்தி என்று மாற்றுவதாக இயக்குநர் தீர்மானித்திருந்தார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி கர்ணன் திரைப்படம் வெளியிடப்படவுள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் யுத்தம்  என்ற பாடல் நாளை வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.