கொரோனா விதிகளை மீறிய விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்!

Wednesday, 31 March 2021 - 11:38

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21
இன்னும் பெயர் வைக்கப்படாத படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இடம்பெற்று வருகிறது. நேற்று முன்தினம் பழனியை காரமடை பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.

இந்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க திருமண மண்டபம் முன்பு திரண்டனர்.  இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்து முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு தளத்திற்கு சுகாதார பிரிவினர் சென்றிருந்தனர்.

அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமை, முக கவசம் அணியாமல் இருந்தமை போன்ற குற்றங்களுக்காக நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்தனர்.