பிக் பொஸ் ஆரியின் வித்தியாசமான தேர்தல் பிரசாரம் (காணொளி)

Wednesday, 31 March 2021 - 17:56

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
தமிழக தேர்தல் ஆணையகத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரசாரம் விழிப்புணர்வு காணொளி ஒன்றில் நடித்துள்ளார்.

இதில் வாக்கு கேட்டு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு காணொளி அமைந்துள்ளது.

“நாட்டுக்காக ஓட்டு போடுங்க உங்களுக்காக முகக்கவசம் போடுங்க“ எனும் வாசகத்தோடு வரும் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாக்களிப்பது எப்படி நமது கடமையோ அதேபோல் சமூக இடைவெளியோடு முகக்கவசம் அணிந்து வாக்களிப்பதும் நமது கடமையாகும் என்கிறார் நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன்.