ரஜினிக்கு தாதா சாகெப் பால்கே விருது! மோடி - கமல் வாழ்த்து

Thursday, 01 April 2021 - 10:34

%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%21+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான 'தாதா சாகெப் பால்கே' விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் தனது ட்விட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, திரைக்கதையாசிரியராக ரஜினிகாந்த் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பு தனித்துவமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பழம்பெரும் பொலிவூட் நடிகர்களான திலீப்குமார், சசிகபூர், வினோத் கன்னா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசன்(1996), இயக்குநர் பாலசந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

51 ஆவது தாதா சாகெப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இவரின் கலைச்சேவையை கௌரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளும் இந்திய மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளன.

ரஜினிக்கு தாதா சாகெப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்திய பிரதமர் மோடி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தொிவித்துள்ளனர்.