சர்வதேச சந்தையில் இலங்கையின் இரத்தினக்கல்- ஆபரணங்களுக்கான கேள்வி அதிகரிப்பு

Thursday, 01 April 2021 - 14:49

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சர்வதேச சந்தையில் உள்நாட்டு இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அத்துடன்,எதிர்வரும் 3 வருடங்களுள் நாட்டுக்குள் வரும் சுற்றுலாப்பயணிகளிடம் உள்நாட்டு இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களை விற்பனை செய்வதன் மூலம் ஒரு பில்லியன் டொலரை வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.