இலங்கையின் பொருளாதாரம் 3.4 சதவீதத்தினால் அதிகரிக்குமென உலக வங்கி அறிவிப்பு

Saturday, 03 April 2021 - 15:46

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+3.4+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 3.4 சதவீதத்தினால் அதிகரிக்குமென உலக வங்கி அறிவித்துள்ளது.

தெற்காசியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 7.2 சதவீதத்தினால் வளர்ச்சியடையும் என அந்த வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய காண்காணிப்புகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 காரணமாக 2020ஆம் ஆண்டு 28 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த மாலைத்தீவின் பொருளாதாரம் 17.1 சதவீதத்தினால் அதிகரிக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் 5.8 சதவீதத்தினாலும் பங்களாதேஷின் பொருளாதாரம் 5 தசம் ஒரு சதவீதத்தினாலும் அதிகரிக்குமெனவும் உலக வங்கி அறிவித்துள்ளது.