IPL போட்டிகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சர்வதேச போட்டிகளை நடத்த வேண்டாமென கெவின் பீட்டர்ஸன் கோரிக்கை

Saturday, 03 April 2021 - 15:58

IPL+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இந்தியன் பிரீமியர் லீக் போட்டி இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சர்வதேச போட்டிகளை நடத்த வேண்டாமென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்ஸன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணி எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதியில் இருந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

எவ்வாறாயினும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் பல வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தநிலையில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி இடம்பெறும் போது வீரர்களை தேசிய அணிக்காக அழைக்க வேண்டாம் என இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் கெவின் பீட்டர்ஸன் கோரிக்கை விடுத்துள்ளார்.