தேயிலை விலையில் வீழ்ச்சி!

Saturday, 03 April 2021 - 19:42

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21
கடந்த வாரத்தில் இடம்பெற்ற தேயிலைக்கான ஏலத்தில் அதன் உற்பத்திக்கான விலையில் வீழ்ச்சி தன்மை பதிவாகியுள்ளது.

கடந்த 10 மாதங்களாக தேயிலையின் விலை உயர் தன்மையில் காணப்பட்டது.

இந்தநிலையில், கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோகிராம் தேயிலை 20 முதல் 30 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்துள்ளமையினால் இலங்கையின் தேயிலை விலையில் இந்த வீழ்ச்சி தன்மை பதிவாகியுள்ளது.