இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் குறித்து மீள பரிசீலிக்க வேண்டும் -பங்களாதேஷ் கிரிக்கட் சபை

Sunday, 04 April 2021 - 13:51

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88
இந்த மாதம் இலங்கையில் பங்களாதேஸூடன் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த டெஸ்ட் கிரிக்கட் தொடர் குறித்து மீள பரிசீலிக்க வேண்டியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கட் தொடரில் பங்குகொண்ட பங்களாதேஷ் அணி இன்று தாயகம் திரும்புகிறது.

தற்போதைய பயண ஒழுங்குகளுக்கு அமைய 14 நாள் தனிமைப்படுத்தல் பங்களாதேஷிற்கு அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாரிய முறையில் பரவி வருவதன் காரணமாக தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றம் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.